Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

தியேட்டர் உரிமைக்கான விற்பனையில் சாதனை படைத்திருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் தென்னிந்திய தியேட்டர் உரிமை இதுவரையிலும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் S.S.ராஜமௌலி இயக்கியிருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.’

300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆந்திராவின் இரண்டு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு 1920-களின் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் இருவரும் நடித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது.

வரும் நவராத்திரி பண்டிகை விடுமுறை தினத்தில் இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்போது இந்தப் படத்தின் ஒரு சிறப்பம்சமாக அலியா பட் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் ஒரு பாடலை தன் சொந்தக் குரலில் பாடியுள்ளாராம்.

இது எல்லாவற்றையும் தாண்டி இத்திரைப்படம் செய்திருக்கும் சாதனை.. இதுவரையில் எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத சாதனையாக இத்திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளின் தியேட்டர் விற்பனை மிகப் பெரிய தொகைக்கு விற்பனையாகியிருக்கிறதாம்.

அந்தத் தொகை 348 கோடி என்கிறது தெலுங்கு படவுலகம். நிச்சயமாக இது மிகப் பெரிய சாதனைதான். முன்னதாக ‘பாகுபலி-2’ திரைப்படம்தான் தென்னிந்திய சினிமாக்களில் மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு மிக அதிகமான வசூலையும் பெற்ற திரைப்படம்.

அதே ராஜமெளலியை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தின் வியாபாரமும் நடந்தேறியிருக்கிறது என்றால்.. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் நிச்சயமாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிதான்.

- Advertisement -

Read more

Local News