Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரியோராஜ் நடிக்கும் புதிய படம் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் D.அருளானந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப் புகழ் அன்புதாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எரும சாணி’ யூ டியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப் புகழ் ப்ரவீனா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். 

ஒளிப்பதிவு – ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத் தொடர் புகழ் KG விக்னேஷ், படத் தொகுப்பு – ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத் தொடர் புகழ் KG வருண், கலை இயக்கம் – ’சத்யா’, ‘பீஸ்ட்’ படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த ABR, இசை – ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ படப் புகழ் சித்து குமார்.

‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியது. ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் இந்தப் படம் பேசுகிறது.

நல்ல உணர்வைத் தரக் கூடிய வகையிலான அன்பு, குடும்பங்களின் பாசம் என இளைஞர்களும் பெற்றோர்களும் நிச்சயம் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்கக் கூடிய வகையிலான படமாகவும் திரும்பி போகும் போது நல்ல நினைவுகளைத் தரக் கூடிய படமாகவும் இது அமையும்.

நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார். 

இந்தப் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

- Advertisement -

Read more

Local News