தமிழ் சினிமாவில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர். ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘துருவநட்சத்திரம்’ வரும் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
இவர் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்துள்ளார் ரிது வர்மா. சமீபத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சியில் ரித்து வர்மாவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள வைஷ்ணவ் தேஜ், ‘நடிகர் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி திருமணத்தில் அவர்கள் இருவருக்கும் அல்லு அர்ஜுன் விருந்து வைத்தார். அந்த விருந்து நிகழ்ச்சியில் லாவண்யாவின் தோழியாகவே ரிது வர்மா கலந்துகொண்டார். அதற்கு மேல் அதில் ஏதுமில்லை. மற்றபடி காதல் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.