Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம்: வெப்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேலன் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஹாரூன் இயக்கியுள்ள படம் வெப். நட்டி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துளார்கள்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் நான்கு இளம் பெண்கள் வேலை செய்கிறார்கள். குடித்து கும்மாளமிடுவதே இவர்களது பொழுதுபோக்காக இருக்கிறது.  இவர்களை ஒரு நபர் பங்களா ஒன்றில் கடத்தி வைத்து சித்திரவதை செய்கிறார்.   அவர்களில்  ஒருவரை கொன்றும் விடுகிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

குடி மற்றும் போதை மருந்துகள் பயன் படுத்துவதால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளை சொல்லும் படமாக உருவாகி உள்ளது வெப்.

“போதை பாதிப்புக்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற சிந்தனையே போதை மருந்துகள் பயன் படுத்துபவர்கள் அதிகம் பயன் படுத்தும் வார்த்தை,குடும்பம் அன்பு, பாசம் இதை தவிர வேறன்ன போதை வேண்டும் “போன்ற வசனங்கள் மனதில் பதிகின்றன.

நட்டிக்கு மாறுபட்ட காதபாத்திரம். பாத்திரம் அறிந்து நடித்துளார். அறிவுரை சொல்லும்போது ஒரு சகோதரன்  சொல்வது போல உள்ளது.

நல்ல நோக்கத்துடன் படம் எடுத்ததை பாராட்டலாம்.

 

- Advertisement -

Read more

Local News