Thursday, April 11, 2024

விமர்சனம்: வீரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்க  ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வீரன்.

வீரனூரில் வாழ்ந்து வரும் குமரன்,  சிறு வயதில் மின்னலால் தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கினர். எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக் வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

இதனால், குமரனை அவரது அக்கா, சிங்கப்பூருக்கு அழைத்து சென்று விடுகிறார் அங்கு ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல, தனக்குள் மின்னல் சக்தி இருப்பதையும்,  தன்னால் இன்னொருவரின் மூளையை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்கிறார்.

சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வருகிறார் குமரன்.

அந்த கிராமத்தில், ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை செயல்படுத்த  தனியார் நிறுவனம் முயற்சிக்கிறது. இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாக வாய்ப்பு உண்டு என்பதும் குமரனுக்கு தெரிகிறது.ஆகவே திட்டத்தை தடுத்து நிறுத்த திட்டமிடுகிறார்.

அவரது முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் கதை.

சூப்பர் பவர் உள்ளவராக, ஹிப் ஹாப் ஆதி நடித்து இருக்கிறார். அப்பாவி இளைஞனாக வரும்போதுகூட பரவாயில்லை. சூப்பர் பவர் வீரனாக பார்க்கும் போது கொஞ்சம் உறுத்துகிறது. ஆனாலும், மனைப்புடன் நடிக்க முயற்சித்துள்ளார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

நாயகி ஆதிராவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. ஆதியின் நண்பனாக வரும் சசி  இயல்பாக நடித்து உள்ளார்.

முனீஸ்காந்த் – காளி வெங்கட் காமெடி கொஞ்சம் சிரிக்கவைக்கிறது.

தீபக் டி. மேனனின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளில் அசத்தல்.

ஊர் எல்லையில் நின்று மக்களைக் காக்கும் எல்லைச்சாமி, நிஜமாகவே நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்பது நல்ல கான்செப்ட் தான். ஆனால் அதை சொன்ன விதத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன்.

 

 

 

- Advertisement -

Read more

Local News