Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம்: வாழ்வு தொடங்குமிடம் நீதானே

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தன்பாலின ஈர்ப்பு என்பதையே சமுதாயம் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் வெவ்வெறு மதங்களைச் சேர்ந்த இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்?

இவர்களின் காதல் வென்றதா, வாழ்வில் இணைந்தார்களா என்பதே கதை.

இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து வெளியிட்ட , ஷார்ட் ஃபிளிக்ஸ் ( செயலி மற்றும் டிஜிட்டல்), தயாரித்த நடிகை நீலிமா இசை பாராட்டுக்கு உரியவர்கள்.
ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா ஆகியோரின் இயல்பான நடிப்பு, தர்ஷன் குமாரின் ஈர்க்கும் இசை, ஜி கே பி மற்றும் சிவா சங்கர் ஆகியோரின் அர்த்தமுள்ள பாடல்கள் படத்துக்கு பலம்.

வாழ்த்துகள்.

வாழ்த்துகளோடு நன்றியும் சொல்ல வேண்டியது இயக்குநர் ஜெயராஜ் பழனிக்கு. ஏற்கெனவே திருநங்கைகளை மையப்படுத்தி சூல் என்ற படைப்பை உருவாக்கியவர். தற்போது வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்களின் வாழ்க்கையைச் சொல்லி இருக்கிறார்.

வளர்ந்த நாடுகள் என்ற சொல்லக்கூடிய தேசங்களிலேயே தன்பாலின ஈர்ப்பார்கள் குறித்த புரிதல் இல்லாத காலம் ஒன்று உண்டு. இப்படிப்பட்டவர்களை மனநோய் பிடித்தவர்கள் என்றே பொதுமக்களும்.. ஏன், மருத்துவர்களும் தீர்மானித்தனர்.

தொடர்ந்த ஆய்வில்தான், இது மனநோய் இல்லை… அவரவர் மனம் சார்ந்தது என்கிற அறிவியல் உண்மை புரிபட்டது.

பல நாடுகளில், தன்பாலின உணர்வாகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் இருந்தது. இப்போதும் சில நாடுகளில் உண்டு.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ‘குறைந்தபட்ச’ தண்டனை இந்தியாவிலும் இருந்தது.

இத்தனைக்கும் இந்து மத புராணக் கதைகளில் ‘லேசு பாசாக’ தன்பாலின ஈர்ப்பு, உறுப்பு மாறுதல் போன்றவை சொல்லப்பட்டே இருக்கின்றன.

ஆனால் மிகச் சமீபத்தில் – 2018ம் ஆண்டு –தான் தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்காக தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்களைகள், சமூக ஆர்வலர்கள் நீண்ட சட்டப்போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, ‘மேற்கத்திய நாடுகள் பலவற்றில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இங்கும் அனுமதித்தால் என்ன’ என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

ஆனாலும் இன்றும் பெரும்பாலானவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்களை, திருநங்கை – நம்பிகளை வேற்றுப்படுத்தி பார்ப்பவர்கள்தான்.
இப்படிப்பட்டவர்களை கொச்சைப் படுத்துவதில் திரைப்படங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இந்த சூழலில், தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்களைப் பற்றிய படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் ஜெயராஜ் பழனி. அவருக்கு வாழ்த்து சொல்வதோடு நன்றியும் சொல்வதுதானே முறை!

தவிர, தான் சொல்ல வந்த கருத்தை பாடமாக எடுக்காமல் திரைப்பட இலக்கணத்தோடு எடுத்து உள்ளார்.

அனைவரிடமும் இயல்பான நடிப்பை வாங்கி உள்ளார், அதே போல வருடும் இசை, அற்புதமான லொகேசன் என்று அனைத்தும் சிறப்பு.

வசனங்கள், எதார்த்தத்தை முகத்தை அறைவது மாதிரி சொல்லிவிடுகின்றன.
‘அன்பு என்பது உணர்வில் இருந்து கவுரவத்துக்கு மாறிடுச்சு’
‘நீதான் உனக்காக சிரிக்கிறே..’
‘பிள்ளையை பொருளா பார்க்கிறாங்க..’
– இவை சில உதாரணங்களே.

சிறந்த படைப்பு என்பதோடு, நல்ல படைப்பும் கூட..!

செப்டம்பர் 28ம் தேதி ஷார்ட் ஃபிளிக்ஸ் ( செயலி மற்றும் டிஜிட்டல்) தளத்தில் இப்படம் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News