Thursday, April 11, 2024

விமர்சனம்:  ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முத்தையா இயக்கத்தில்  ஆர்யா – சித்தி இத்னானி  ஜோடியாக நடித்துள்ள படம், ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க,  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பெற்றோரை இழந்த கிராமத்து இளம் பெண்ணான, தமிழ் செல்வியின் சொத்துக்களை அவரின் முறை மாமன்கள் அபகரிக்க நினைக்கின்றனர்.  இந்த நிலையில்தான் ஜெயிலில் இருக்கும் காதர் பாட்ஷாவை நேரில் சந்திக்க செல்கிறாள் செல்வி. ஆனால் அந்த சந்திப்பு கைகூடாமல் போகிறது.
இதனை தெரிந்து கொள்ளும் காதர் பாட்ஷா தன்னைத் தேடி வந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ள அவளது கிராமத்துக்குச் செல்கிறான்.

அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் ஆர்யா மிரட்டுகிறார். குறிப்பாக  சண்டைக்காட்சிகளில்  அனல் பறக்க வைக்கிறார்.
ஜமாத் தலைவராக வரும் நடிகர் பிரபிவின் நிதானமான நடிப்பு சிறப்பு. ஆடுகளம் நரேன், கே.ஜி.எஃப் வில்லன் புகழ் அவினாஷ், ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் என  வழக்கம்போல் சிற்ப்பாக நடித்துள்ளனர்.

தமிழ் செல்வியாக வரும் சித்திக் இத்னானின் கதாபாத்திரம்,  இளமையோடு, முறுக்காகவும் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.

‘கறிக்கொழம்பு வாசம்’ பாடல் துள்ளல். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல். வேல்ராஜின் ஒளிப்பதிவு முடிந்த அளவு கதையோடு நம்மை ஒன்ற வைத்திருக்கிறது.

இராமநாதபுரம் இஸ்லாம் மற்றும் இந்து மக்களுக்கு இடையான பிணைப்பை சொன்ன விதம் அருமை.

 

 

- Advertisement -

Read more

Local News