Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விமர்சனம்: தலைக்கூத்தல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், நடிகைகள்: சமுத்திரக்கனி, கதிர்,  வசுந்தரா உள்ளிட்டோர்

இயக்கம்: ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இசை: கண்ணன் நாராயணன்

 ஒளிப்பதிவு : மார்டின் டான் ராஜ்

கதை:  தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர் சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரு மகள். இவர்களுடன் மரண படுக்கையில் சமுத்திரக்கனியின் வயதான அப்பாவும் இருக்கிறார்.

தந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார் சமுத்திரகனி. ஆனால் அந்த முதியவரை, எல்லோரும் பாரமாக நினைக்கிறார்கள்.

. அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில், முதியவர்களை  கொலை செய்யும் முறை இருக்கிறது.  அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் சமுத்திரக்கனி மறுக்கிறார். மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

விமர்சனம்: சமுத்திரக்கனியின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கயமான படம். அவரும் அதை உணர்ந்து கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்.  தந்தைக்கு பாசமான மகனாக, மனைவியின் அவமானங்களை பொறுத்துக் கொள்ளும் கணவனாக, மகளுக்கு பாசமான தந்தையாக.. மொத்தத்தில் ஒரு குடும்பத் தலைவனாக கண் முன் நிற்கிறார்.

வசுந்தரா யதார்த்தத்தை கண்முன் நிறுத்துகிறார். கணவனை அவசரப்பட்டு அடிப்பதும் பிறகு கையை பிசைந்து நிற்பதும் கணவனின் அடிக்கு பயந்து ஓடுவது.. அசத்துகிறார் வசுந்தரா.

பிளாஷ்பேக்கில் வரும் கதிர் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ரசிக்க வைக்கிறார்.  அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி மனதில் ஒட்டிக் கொள்கிறார். ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.

படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன்.

மென்மையான இசையை கொடுத்திருக்கிறார் கண்ணன் நாராயணன். கிராமத்து அழகை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் மார்டின் டான் ராஜ். அழுத்தமான படத்தை சுவாரஸ்யமாக அளித்து இருக்கிறார்  இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் படம் அனைவரையும் கவர்கிறது.

 

- Advertisement -

Read more

Local News