Wednesday, April 10, 2024

விமர்சனம்: சிங்கப்பூர் சலூன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா.  இவரது  ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் இளைஞன் கதிர்.

இதில் பல தடைகளைச் சந்திக்கிறான். இவற்றை மீறி தனது இலக்கை அடைந்தானா என்பதுதான் கதை.

இளைஞன் கதிராகா, ஆர்.ஜே.பாலாஜி தோன்றுகிறார். வழக்கம்போல, டைமிங் காமெடியில் அசத்துகிறார். கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்துகிறார்.

நாயகிகி  மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை.

கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால் என  அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள்.

சத்யராஜ் அசத்துகிறார். கஞ்சாம்பட்டி மாமனாராக வரும் அவரது அலப்பறைகள் ரசிக்கவைக்கின்றன.  அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிட அட்ராசிட்டி சிறப்பு.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும் ஓகே.

செல்வகுமாரின் எடிட்டிங் கச்சிதம்.  சலூன் கடையை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்  கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

நகைச்சுவையாக செல்லும்வரை படம் ஓகேதான்.  ஆனால், திடீரென, சீரிஸஸ் மோடுக்கு மாறும்போது திரைக்கதை தள்ளாடுகிறது. வெள்ள பாதிப்பு, வாழ்விடத்தை இழக்கும் மக்கள், பறவைகள் குறித்த விழிப்புணர்வு என ஏகத்துக்கு அட்வைஸ் செய்து போரடிக்கிறார்கள்.  இவற்றில்,  ஏதாவது  ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.

குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு,  பல காட்சிகள் அந்நியப்பட்டு நிற்கின்றன.

ஆனாலும் பல நல்ல விசயங்களை, சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என முயற்சித்த இயக்குநர் கோகுலுக்கு பாராட்டுகள்.

 

- Advertisement -

Read more

Local News