விமர்சனம்: பிச்சைக்காரன் 2

இந்தியாவின் 7வது பெரிய பணக்காரர் விஜய் குருமூர்த்தி. அவரது சொத்துகளை அபகரிக்க, உடன்  இருப்பவர்களே திட்டம் போடுகிறார்கள்.

அவரைக் கொன்று, அவரது மூளையை, சத்யா பிச்சைக்காரர் ஒருவருக்கு பொறுத்துகிறார்கள்.

பணக்காரர் உடம்பில் உள்ள பிச்சைக்காரர் என்ன ஆனார், அதனால் சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன, அந்தச் சொத்துகள் யாருக்குச் சென்றன, போன்ற கேள்விகளுக்கான விடைதான் படம்.

முழுக்க முழுக்க, ‘க்ரீன் மேட்’டில் க்ராபிக்ஸை நிரப்பி படத்தை எடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான தமிழரசன் படத்தில், யோகிபாபு, “அவன் (விஜய் ஆண்டனி) விதவிதமான வேசத்துல வருவான். ஆனா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஏன்னா, எல்லா வேசத்தலயும் மூஞ்சை ஒரே மாதிரிதான் வச்சிருப்பான்”  என கிண்டலடிப்பார்.

அதேதான் இதிலும்.

பணக்காரர், பிச்சைக்காரர், பணக்காரர் உடம்பில் இருக்கும் பாவப்பட்ட பிச்சைக்காரர், பணக்காரர் உடம்பில் இருக்கும் புத்திசாலி பிச்சைக்காரர் எனப் பல விதங்களில் வேடங்களில் வருகிறார் விஜய் ஆண்டனி.

இதை தன்னம்பிக்கை என்று சொல்ல முடியாது.. நடிப்பு உள்ளிட்ட திரைக் கலை மீது அவருக்கு உள்ள மரியாதை அவ்வளவுதான்.

நாயகி காவ்யா தாப்பர் வழக்கமான காதலி கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.

கில் தேவ், ராதா ரவி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி என ஏகப்பட்ட வில்லன்கள். ஆனால் திரைக்கதை சொதப்பலால் எடுபடவில்லை.

சென்னை சாலைகள்,  நாயகனின் ஆடம்பர வீடு, அலுவலகம், துபாய் பாலைவனம் என எல்லாமே கார்டூன்களைப் போல படு லோக்கலான கிராபிக்ஸ்!

விஜய் ஆண்டனி இசையில், ‘கோயில் சிலையே’ பாடல் மட்டும் ஓகே ரகம்.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை லாஜிக் மீறல்கள்..

மொத்தத்தில் பழைய ஆள் மாறாட்டக் கதையை சயின்ஸ் ஃபிக்‌ஷனாக மாற்றி