Thursday, April 11, 2024

விமர்சனம்: மியூஸிக் ஸ்கூல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடல் ஆசிரியர் ஸ்ரேயா சரண், நாடக ஆசிரியர் ஷர்மன் ஜோஷி இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரிகிறார்கள். இவர்களது வகுப்பு நேரத்தை பிற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் தங்களது வீட்டிலேயே பாடல் மற்றும் நாடக பயிற்சி வகுப்பை துவங்குகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஷ்ரேயா நிஜமான பாடல் ஆசிரியர் போலவே தோன்றி இருக்கிறார்.  பிரின்ஸிபால், தங்களை ஒதுக்குவதை கண்டு ஆதங்கப்படுவது, மாணவர்களை அழைத்துக்கொண்டு உற்சாகமாக கோவா செல்வது என ஒவ்வொரு காட்சியிலும் உற்சாகம் துள்ள நடித்து இருக்கிறார்.

ஷர்மன் ஜோஷி இயல்பான நடிப்பு.

பிரகாஷ்ராஜ் கண்டிப்பான  காவல் அதிகாரியாக மட்டுமின்றி, கண்டிப்பான தந்தையாகவும் சிறப்பாக நடித்து உள்ளார்.லீலா சாம்சன் உள்ளிட்டோரும் அருமையான நடிப்பை அளித்து உள்ளனர்.

இளையரஜாவின் இசையில் பாடல்கள் சிறப்புதான். ஆனால் அதிகமான பாடல்கள் சோர்வடைய வைக்கின்றன.

‘மம்மி சொல்லும் வார்த்தை’ என ஆரம்பிக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் வகையிலும், இன்றைய நவீனகால இளைஞர்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

வாழ்வில் ஜெயிக்க மிக உயர்ந்த கல்வித் தகுதியை அடைய வேண்டுமென வற்புறுத்தும், பெற்றோரின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை நுட்பமாகக் கேலி செய்யும் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ பாடல், குழந்தைகள், பெற்றோரைப் அல்லாமல் சுதந்திரமாக வாழ்வதைப் பற்றியும், நவ நாகரீக இளைஞர்களின் உலகைப் படத்தின் கதாப்பாத்திரங்கள் வழியாக அழகாகச் சித்தரிக்கிறது.

பள்ளி குழந்தைகளுக்கு பாடல்  இசை போன்ற கலை மற்றும் விளையாட்டுகள் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி இருக்கும் படம்.

 

- Advertisement -

Read more

Local News