விமர்சனம்:   ‘கிங் ஆஃப் கோதா’

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி துல்க்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், கிங் ஆஃப் கொத்தா. ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, நிமிஷ் ரவி  ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

கதை: கொத்தா என்கிற நகரத்தில் தாதாக்களின் சாம்ராஜ்யம் நடக்கிறது. போதை பொருள் கூடாரமாக விளங்குகிறது.

இங்கு, கண்ணன் பாய் என்ற ரவுடி கோலோச்சுகிறார். இங்கு புதிய காவல்துறை அதிகாரியாக பிரசன்னா வருகிறார். இவர் கண்ணன் பாய் செய்யும் அராஜகத்தை ஒழிக்க நினைக்கிறார். இவரால் அது முடியவில்லை.

இதையடுத்து கண்ணன் பாய்க்கு முன்பு, கொத்தாவில் ஆட்சி செய்து – பிறகு வெளியூர் சென்றுவிட்ட –   துல்கர் சல்மானை வரவழைக்கிறார்.இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை.

வழக்கமாக ரொமான்டிக் ஹீரோவாக வரும் , துல்கர் சல்மான் அதிரடி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்தான் மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் எமோஷன், பிஜிஎம் என்று  அதிர வைக்கிறது.

 

வெறும் ஆக்சன் படமாக இல்லாமல் இரு நண்பர்களுக்கு மத்தியில் சென்டிமெண்ட்டான பாசம், அவர்களுக்குள் உருவாகும் சண்டை, காதல், என பலவித உணர்வுகளை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

பெண்கள் குறித்து வரும் கொச்சையான வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம். மற்றபடி ரசிக்க – அதிரவைக்கும் படம்.