Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம்: சந்திரமுகி -2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்துள்ள சந்திரமுகி -2 படம் வெளியாகி இருக்கிறது.

படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சிதான்.  முருகேசன் (வடிவேலு) தன் (பேய்) பங்களாவை விற்க திட்டமிடுகிறார்.

குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செய்ய  ராதிகா குடும்பம் நினைக்கிறது.  குலதெய்வ கோயில் அருகே இருக்கும் இந்த பங்களாவில் தங்குகிறது. விலைக்கே வாங்கிவிடலாம் என்றும் திட்டமிடுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல சந்திரமுகி ஆவி மிரட்ட ஆரம்பிக்கிறது. தன்னையும் தனது காதலனையும் கொன்ற வேட்டையனை பழிவாங்க நினைக்கிறது.

இதற்கிடையே, ராதிகா குடும்பத்துக்கும் ஆவியால் பாதிப்பு ஏற்படுகிறது.  அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் உடலில் ஆவி புகுந்துவிடுகிறது.

ஹீரோ ராகவா லாரன்ஸ், அந்த குடும்பத்தின் உயிரைக் காப்பாற்ற – சந்திரமுகி ஆவியை சாந்தப்படுத்த தன் உயிரை பணயம் வைக்கிறார்.

அவருக்கு வெற்றி கிடைத்ததா, குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டனரா என்பதுதான் கதை.

பல காட்சிகள் முதல் பாக்கத்தைப் போலவே இருப்பதால் சட்டென, படத்தில் ஒன்ற முடியவில்லை. அதே நேரம்,  வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்கவைக்கின்றன.

குறிப்பாக லாரன்ஸ் உடன் சேர்ந்து செய்யும் காமெடியில் வடிவேலு ரசிக்கவைக்கிறார்.

ராகவா லாரன்ஸ் பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்து உள்ளார். குழந்தைகளுக்காக சண்டையிடுவது,  அவர்களுக்கு அவமானம் நேரும்போது ஆக்ரோசமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்துவது என சிறப்பான நடிப்புதான். ஆனால் ரஜினி பாணியை அவர் கைவிடலாம்.

கங்கனா சந்திரமுகியாக நன்றாக நடிக்கிறார். ஆக்ரோஷ சந்திரமுகியாக மாற்றம் அடையும் போது மிரட்டுகிறார்.

கீரவாணி  இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. தோட்டா தரணியின் கலை வடிவத்தில் அரண்மனை பிராம்மாண்டமாக வியக்கவைக்கிறது.

பேய்ப்படத்துக்கே தேவையான பயமுறுத்தும் ஒளிப்பதிவு இசை ஆகியவை இதிலும் உள்ளன.

மொத்தத்தில் பயந்து ரசிக்கலாம்!

 

 

- Advertisement -

Read more

Local News