Saturday, July 27, 2024

விமர்சனம்: அடியே

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதல் கதைதான். ஆனால்,  டைம் டிராவல், டைம் லூப், பேரல்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்க்ஷன்களால் வித்தியாசமாக – ரசிக்கும்படி  உருவாக்கி இருக்கிறார்கள்.

அதீத அறிவியல் பிக்சன்.. ஆனால் எளிதில் புரியும்படி திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட,  தற்கொலை  செய்துகொள்ள முயல்கிறார் ஜி.வி. ஜிவி பிரகாஷ். கடைசி நேரத்தில் டிவியில் ஒரு பாடல் ஒலிக்க.. ஆச்சரியம் அடைகிறார். அது அவரது பழைய காதலியின் குரல். ஆனால் அந்தப் பெண்ணுக்கு இவரைத் தெரியாது. இவர் அந்த பாடகியை பாராட்டி எழுதிய கடிதம் மட்டுமே தெரியும்.

இந்த நிலையில், பிரகாஷ் விபத்தில் சிக்கி மயக்கமாகிறார்.  மயக்கம் தெளிந்து பார்த்தால், வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார்.

அவர் வசித்த அதே சென்னை மாநகரம்தான்.   ஆனால் அது மெட்ராஸ் என்று அழைக்கப்படுகிறது.  சாலையின் குறுக்கே மெட்ரோ ரயில், தலைக்கு மேல பறக்கும் ஹெலிகாப்டர்கள், பனி பொழிவது என பல்வேறு மாற்றங்கள்.

தவிர அவருக்குத் தெரிந்த பலரது பெயரும் மாறி இருக்கின்றன. இவரை பெரிய மியூசிக் டைரக்டர் என்கிறார்கள். ஆனால் இவருக்கு இசை பற்றி எதுவுமே தெரியவில்லை.

அவரது காதலி மனைவியாக ஆகியிருக்கிறார்.

இதெல்லாம்  உண்மையா பொய்யா என்று பிரகாசுக்கு தெரியாமல் குழம்புகிறார்.

இந்த நிலையில் திடீரென்று மீண்டும் பழைய உலகுக்குள் பிரவேசிக்கிறார்., அங்கே தன் காதலி, நண்பனின் காதலியாக இருக்க… பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.

குழப்பமான கதை போல் தோன்றாலும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கு அனைவருக்கும் புரியும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார். அதற்காக அவரை வாழ்த்தலாம்.

ஜிவி பிரகாஷூக்கு மிக பொருத்தமான கதாபாத்திரம். சிறப்பாக நடித்து உள்ளார்.

நாயகி கௌரி கிஷனும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.

ஜீவியின் நண்பராக  முதல் உலகத்தில் வாசிம் அக்ரமாகவும், இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸ் ஆகவும் வரும் ஆர்.ஜே.விஜய் சிரிக்க வைக்கிறார்.

இரண்டாவது உலகத்தில் கௌதம் மேனன் ஆக வரும் வெங்கட் பிரபு, தன்னைத் தானே கலாய்த்துக் கொள்வதும் கலகல.

இயக்குனர் மணிரத்தினம் ஃபாஸ்ட் பௌலர், பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளர் என ஏகத்துக்கு கிண்டலடித்து இருக்கிறார்கள். ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு,  ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.

மொத்தத்தல் ரசிக்கவைக்கிறது.

- Advertisement -

Read more

Local News