Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ‘ரெஜினா’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகின் திறமைமிக்க நடிகையான சுனைனா ‘நீர்ப் பறவை’, ‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்.

தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா’ என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார் சுனைனா.

இந்தப் படத்தை எல்லோ பியர் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தயாராகிறது.

இந்த ‘ரெஜினா’ படத்திற்கு இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.
இந்தப் பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாடல்கள் சிங்கப்பூரில் பதிவாக்கப்பட்டன.

கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி வாசித்து இருக்கிறார். இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்ந்தவர்.

பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர். பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் படத் தொகுப்பு செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார், மலையாள இயக்குநரான டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ‘பைப்பின் சுவத்திலே பிராணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ படங்களை இயக்குகியவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் டோமிந் டி சில்வா பேசும்போது, “இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும். நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும்…” என்றார்.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை சுனைனா பேசுகையில், “ரொம்ப சாதாரணமான ரெஜினா என்ற ஹவுஸ் வொய்ஃப் கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறேன்.

ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள்தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதைபதைக்கிற காட்சிகள் படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும். இயக்குநர் டாமின் டி.சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையை அவர் சொல்லும்போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்திய ஹிட்  படங்களான பைபிள் சுவத்திலே பிராணயம்’, ‘ஸ்டார்’ போன்ற படங்களைவிட ‘ரெஜினா’ படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் “ரெஜினா” முக்கியமான படமாக இருக்கும்…” என்றார் சுனைனா.

படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News