“ராத்திரி வா!”: நடிகை டார்ச்சர் செய்தாக நடிகர் புகார்!

தெலுங்கு, இந்தி, பேஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ரவி கிஷன். தமிழிலும் பிரபல நாயகியாக வந்த நக்மாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவர்.

தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

“ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.

ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது” என்று கூறியுள்ளார்.

அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம்.