பிரதீப் ரங்கனாதன் இயக்கி, ஹீரோவாக நடித்த படம் லவ் டுடே. இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நாயகையாக நடித்த இவானாவிற்கு இணையாக, நாயகனின் அக்காவாக நடித்த ரவீனாவும் பேசப்பட்டார். இவர், பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.இந்த ரவீனாதான், தனது சிறுவயதில் சூர்யாவுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இதை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ரவீனா.