பாலிவுட்டில் அதிகப்படியாக பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கு மூலம் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தமிழ் நடிகையும் பாடகியுமான சின்மயியின் கணவரான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். ராஷ்மிகாவிற்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் கவுசிக் மகதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் இணைப்பில் தயாராகி வருகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் வெளியிடுகிறார்.

இந்நிலையில், ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடலாக “நதியே” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான தமிழ் வரிகளை கவிஞர் ராகேந்து மவுலி எழுதியுள்ளார். இந்த பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது என்றும், விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.