தற்போது அரசியல் வட்டாரத்தில், ரபேல் வாட்ச் தான் ஹாட் டாபிக் இது குறித்து திரைப்பட விழா ஒன்றில் கிண்டலாக பேசி இருக்கிறார் நடிகர் சாம்ஸ்.
வினோ இயக்கத்தில் சாம்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், ‘ப்ராஜெக்ட் சி’. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்வில் சாம்ஸ், “நகைச்சுவை இல்லாமல், வில்லனாக முதல்முதலாக இப்படத்தில் நடித்து இருக்கிறேன். குணசித்திர நடிகனாக என்னுடைய பயணம் தொடர்வதற்கு இப்படம் உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீக்கு ஒரு வேண்டுகோள். வழக்கமாக ஹிட் கொடுக்கும் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கார் வாங்கி கொடுக்கிறார்கள். அதுபோல் நன்றாக நடித்த நடிகர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி கொடுக்கிறார்கள். நீங்கள், ரோலக்ஸ் வாட்ச் கொடுக்க வேண்டாம். ரஃபேல் வாட்ச் வாங்கி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இப்போது வாட்ச் பற்றி பேசுவதைதான் அனைவரும் வாட்ச் செய்கிறார்கள். யார் யார் என்னென்ன வாட்ச் கட்டியிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது” என சந்தடி சாக்கில் அரசியல் பேச.. கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.