Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

வியக்க வைத்த ரஜினி!: சூரி நெகிழ்ச்சி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினியுடனான முதல் சந்திப்பு குறித்து வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார் நடிகர் சூரி.

அவர், “நான் சிறு வயதில் இருந்தே ரஜினி ரசிகன். அவரை சந்திப்பதே பெரிய விசயம். ஆனா்  ‘அண்ணாத்தபடத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததது.

படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றபோது, ஓட்டலில் அவருக்கு அடுத்த அறை எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்புக்கு நான் சென்றபோது  ஒரு ரசிகனாக அவரை பார்க்க காத்திருந்தேன்.

அவரோ மிகஇயல்பாக, “சூரி.. நல்லா இருக்கீங்களா..” என பாசத்தோடு விசாரித்தார். அதுமட்டுமல்ல.. செட்டில் நான் தயங்கி நின்றாலும் இடைவேளையில்  அழைத்து ஜாலியாக பேசினார். இத்தனை உயரத்தை எட்டினாலும் எளிமையான மனிதர் ரஜினி” என்றார் சூரி.

- Advertisement -

Read more

Local News