மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி!
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் எளிமைக்கு பெயர் போனவர் ரஜினி. எப்போதுமே அவர் இப்படித்தான்.
1977 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிவகுமார், சுமித்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “புவனா ஒரு கேள்விக்குறி”. iதிரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆந்திர மாநில எல்லையில் இருக்கும் தடா பகுதியில் நடந்தது.
அங்கு ஒரு நாள் படப்பிடிப்பு என தீர்மானித்து இருந்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். ஆனால் நினைத்த அளவுக்கு காட்சிகளை எடுக்க முடியவில்லை.
பின் போது தடா பகுதியில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அக்காட்சிகளை ஒரு நாளில் முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் எஸ் பி முத்துராமன். ஆனால் இப்படி ஒரே நாளில் எடுக்க முடியவில்லை. மறுநாளும் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை.
படக்குழுவினர் அனைவரையும் சென்னைக்கு அனுப்பி விட்டு மறுநாள் தடாவுக்கு வரச் செய்வது முடியாத காரியம். ஆகவே முக்கிய நடிகரான ரஜினியிடம், “நீங்கள் மட்டும் சென்னைக்கு சென்று விட்டு நாளை வாருங்கள். இங்கே தங்குவதற்கு சரியா வசதி இல்லை.. வீடு ஒன்றின் மொட்டை மாடியில்தான் தங்க வேண்டி இருக்கும். அருகில் இருக்கும் டீக்கடையில் தான் சாப்பிடும் நிலை” என்றார் முத்துராமன்.
ஆனால் ரஜினி, “எல்லோரும் இங்கு தங்கும் போது, எனக்கு மட்டும் என்ன.. நானும் இங்கு தங்குகிறேன்.. நீங்கள் எந்த மொட்டை மாடியில் தங்குகிறார்கள் அங்கேயே நானும் தூங்கிக்கொள்கிறேன். எந்த தேநீர் கடையில் உங்களுக்கு உணவு கிடைக்கிறதோ அதையே நானும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என கூறி அவர்களுடன் அன்று இரவு மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் படுத்து தூங்கி இருக்கிறார்.
ரஜினியின் எளிமை என்பது இப்போது வந்ததல்ல.. அது அவருடைய பிறப்பிலேயே வந்தது.