Saturday, July 27, 2024

ஸ்ரீதேவியை பெண் கேட்கப் போன  ரஜினி!: அப்புறம் நடந்ததுதான் சோகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். “ஜானி”, “பிரியா”, “போக்கிரி ராஜா”, “அடுத்த வாரிசு”, “நான் அடிமை இல்லை” போன்ற பல திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.  இதற்கெல்லாம் முன்பாக, “16 வயதினிலே”, “மூன்று முடிச்சு” போன்ற பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்துக்கு ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவியின் மீது காதல் மலர்ந்ததாம். அதாவது ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் ஒரு தலையாக காதலித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பெண் கேட்பதற்காக இயக்குனர் மகேந்திரனுடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றாராம். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனே மின்சாரம் தடைபட்டிருக்கிறது. அபசகுணமாக இருக்கிறதே என்று எண்ணி அவர்கள் எதுவும் பேசாமல் அப்படியே திரும்பிவிட்டார்களாம்.

இந்த தகவலை இயக்குநர் மகேந்திரன் பத்திரிகை பேட்டி ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் கூறினார்.

தற்போது அதை நினைபடுத்தி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சித்ராமணி தெரிவித்தார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளுக்கு டூரிங் டாக்கீஸ் சேனலை பாருங்கள்..

- Advertisement -

Read more

Local News