Saturday, August 17, 2024

ரஜினி பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

ஒரு கட்டத்தில் முரளி மனோகர், அபிர்சந்த் நஹாருக்கு கடனை திருப்பித் தருவதாக கூறி, ரூ.5 கோடிக்கான காசோலை கொடுத்தார். அது பணமின்றி திரும்பியது.

இதையடுத்து அவர் மீது அபிர்சந்த் நஹாவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இதில், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், வட்டியுடன் சேர்த்து 7 கோடியே 70 லட்சம் தரவும்  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம், முரளிமனோகரின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ.7.70 கோடியை வழங்கவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News