Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

ரஜினி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் கிளம்பினார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வாக்குப் பதிவு என்றைக்கடா முடியும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் தமிழ்ச் சினிமாவில் இரண்டு பேர்தான். ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இன்னொருவர் நடிகர் விஜய்.

வாக்குப் பதிவன்று சைக்கிளில் வந்து தமிழகத்தை கலக்கிய விஜய் அன்றைய இரவிலேயே தனது 65-வது படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா கிளம்பிவிட்டார்.

இதோ இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது ‘அண்ணாத்த’ படத்தின் ஷீட்டிங்கிற்காக ஹைதராபாத் கிளம்பிவிட்டார்.

ரஜினிக்காக தனி விமானத்தை தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை 9 மணியளவில் ரஜினி ஹைதராபாத்திற்குக் கிளம்பியிருக்கிறார்.

இதுநாள்வரையிலும் சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பிலும் ரஜினி கலந்து கொண்டார்.

இப்போது நடைபெறுவது 4-ம் கட்ட படப்பிடிப்பு. இது தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News