தலைவர் 171:  ரஜினியே கொடுத்த அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து ப்ளாக் பஸ்டர் கொடுத்து உள்ளார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக ரஜினியுடன் படம் எடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “ தலைவர் 171 படம் நிச்சயமாக நல்லா வரும். தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்.  அதன்பிறகு லோகேஷ் படம் வரும்” என்று கூறினார்.