கை உடைந்தும் ஆடிய ரஜினி!

1980, 90-களில் நடன இயக்குநராகத் தமிழ் உட்பட ஐந்து மொழி சினிமாக்களில் பணியாற்றியவர் புலியூர் சரோஜா.  எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ரஜினி, கமல், கார்த்தி வரை பலரும் இவரது நடன அசைவுக்கு ஆடியிருக்கிறார்கள்.

ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம் பெற்ற, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’  பாடல் இன்று வரை பிரபலம் அல்லவா.. அதற்கு நடனம் அமைத்தவர் இவர்தான்.

அந்த அனுபத்தை சரோஜா பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

“அந்த பாடலின் போது, ஒரு ஷாட்டில், ரஜினியிடம் ஒன்ஸ் மோர் கேட்டேன். உடனே படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ‘உனக்கு அறிவு இருக்கா…. அவர்கிட்ட ரெண்டாவது டேக் கேட்கிறியே.. அவரே விபத்தில் கை உடைஞ்ச நிலையில நடிக்கிறாரு’  என்றார்.

எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே ரஜினியிடம், ‘ஸாரிடா தம்பி’ என்றேன். அதற்கு ரஜினி, ‘அக்கா.. நமக்கு சினிமாதான் பார்ஸ்ட். நீங்க என்ன மாதிரி சொல்றீங்களோ.. அப்படி ஆடுறேன்..’ என்றார். அதே போல, சிறப்பாக நடனம் ஆடி முடித்தார்”  என்று ரஜினியின் அர்ப்பணிப்பு குறித்து தெரிவித்தார் புலியூர் சரோஜா