Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பத்திரிகைகளுக்கு ரஜினியின் வேண்டுகோள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் தேவா நேற்று தனது 72-வது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார். அவரது பிறந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவும் தேவாவின் இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பிளாக் ஷீப் நிறுவனம் ஒருங்கிணைத்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின்போது, ‘பாட்ஷா’ படத்தின் மாஸான பி.ஜி.எம். ஒலிக்க, அந்த படத்தின் பாணியில் கோட்சூட் போட்ட நால்வருடன் ரஜினி மேடையேறியபோது ரசிகர்களின் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.  

அப்போது மேடையில் பேசிய ரஜினி, “சிங்கப்பூர் நாட்டில் அதிபராக இருந்தவர் நாதன். தமிழரான அவர் மலேசியாவில் வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன், அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, நமது இயக்குநர் சேரனின் இயக்கத்தில் வெளியான பொற்காலம்’ படத்தில்  இடம் பெற்ற, தேவா இசையமைத்து, வைரமுத்து எழுதியிருந்த ‘தஞ்சாவூரு மண்ணு’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் இறந்த பிறகு அந்த பாடலை ஒலிக்கவிட்டு, அதன் பின்னர்தான் எனது உடலை எடுத்துச் செல்ல வேண்டும்..” என எழுதியிருந்தார். 

அதேபோல் சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்த பின்னர் அவரது உடலை கொண்டு சென்றபோது, உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது.

இந்தப் பாடலை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் என பல நாடுகளில் மொழி பெயர்த்து பத்திரிகைகளில் எழுதியிருந்தனர். ஆனால், எந்த தமிழ் ஊடகமும் அது குறித்து எழுதவில்லை. 

அப்போது தேவாவுக்கு மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்…? இதனால், தயவு செய்து இது போன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளி உலகிற்கு சொல்ல வேண்டும்…” என்று வேண்டுகோள் விடுத்தார்.

- Advertisement -

Read more

Local News