எம்.ஜி.ஆர் பட தலைப்பில் நடித்த ரஜினி!

ஏற்கெனவே வெளியான திரைப்படங்களின் பெயரில் புதிய படங்களுக்கு டைட்டில் வைப்பது தற்போது அதிகரித்து உள்ளது. குறிப்பாக ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளில் வேறு நடிகர்கள் நடித்து புதிய படங்கள் வெளியாகின்றன.

அந்த வகையில், ரஜினியின்  தங்கமகன், படிக்காதவன், வேலைக்காரன், மாவீரன், வீரா,ராஜாதிராஜா என பல படங்களை வரிசைப்படுத்தலாம்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் தலைப்பும், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தலைப்பும் அப்படித்தான்.ஆனால் ரஜினி படம் ஒன்றே, ஏற்கெனவே வெளியான தலைப்பில் வெளியாகி இருப்பது பலருக்குத் தெரியாது. அது.. எம்.ஜி.ஆரின் தாய்வீடு திரைப்படம்.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதே தலைப்பில்  1983ல் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி, அனிதா ராஜ் நடித்த திரைப்படம்!