Thursday, November 21, 2024

ராஜமெளலிக்கு ஏமாற்றத்தைத் தந்த ‘RRR’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வாரம் ஜப்பானில் வெளியான ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லையாம்.

பிரம்மாண்டமான படங்களுக்குப் பெயர் போன இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘RRR’ படம், இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்திற்குப் பின் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல், நெட் பிளிக்ஸில் வெளியாகி மேற்கு உலக நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின்  இந்தி வெர்ஷன் ‘நெட் பிளிக்ஸ்’ ஓடிடியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட வெர்ஷன் ‘ஜீ 5’ ஓடிடி தளத்திலும் வெளியாகின.

‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் புதிய சாதனை ஒன்றையும் இந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் படைத்துள்ளது. அதாவது ஆங்கிலம் அல்லாத பிறமொழி திரைப்படங்களில் அதிக மணி நேரங்கள் இந்தப் படம்தான் ‘நெட் பிளிக்ஸ்’-ல் பார்க்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட களம், நட்பு, காதல், சண்டை காட்சிகள் என தரமான மசாலா திரைப்படமாக இதனை ராஜமவுலி உருவாக்கியிருந்தார். இப்படத்தை பார்த்து வியந்து பல ஹாலிவுட் இயக்குநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜப்பானில் வெளியான இந்த ‘RRR’ படம் வெளியீட்டாளர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதுவரையிலும் அந்தப் படம் 4 கோடி ரூபாயைத்தான் வசூலித்துள்ளதாம்.

இயக்குநர் ராஜமௌலி இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக ஜப்பானுக்கே சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வுகளுக்காக 5 கோடிக்கும் மேலே செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News