தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளில் ஒரு ஜோடி ரகுவரன் மற்றும் ரோகிணி. ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிரிழந்தார்.
ரகுவரன் இறப்பதற்கு முன்பாக அதாவது 21/02/2007 அன்று, பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
“ஒரு நாள் இரவு காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் சென்றிருந்தேன். வாசலில் ஒரு வயசான கிழவர் அழுக்காபடுத்திக்கிடந்தார். திடீர் என்று முழித்து ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித்திட்டினார் . கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக் குள்ளஉடாக்கார்ந்து இருந்தார். பார்த்துட்டு, ‘தெரியாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி. அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப்படுத்து விட்டார்கள். பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைத்து பார்த்தல் அடுத்த ஜென்மத்திலாவது அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசு ஏங்கியது.
இன்னொரு நாள், சிக்கனலில் காரில் காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி என் சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ ஒரு நினைப்பில் சட்டுடென்று குழந்தை கையைத் தட்டிட்டு வந்திவிட்டேன். ஏனெண்று தெரியவில்லை, திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்து கொண்டே இருந்தது. மறுபடி அந்த பையனை போய்த் தேடினேன். அந்தக் குழந்தையைக் காணோம். –
உடனே என் மகன் ரிஷிக்கு போன்செய்து, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச்சொன்னேன்.
இப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக் உள்ளேயும் என்னைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது” என நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.