Friday, April 12, 2024

“காதல் தோல்வியால் துவண்டிருந்த ராதிகாவுக்கு தைரியம் சொன்னேன்”

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை காதலித்து தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நடிகை ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றியதாகச் சொல்கிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.

ஒரு வீடியோ பேட்டியில் அவர் இது பற்றிப் பேசும்போது, “1989-ம் வருடம் ‘நினைவுச் சின்னம்’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் பிரபு, ராதிகா, விஜயகுமார், சித்ரா இவங்க எல்லாம் நடித்தார்கள்.

அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ராதிகா மிகுந்த மனத் துயரத்தில் இருந்தார். அப்போதுதான் அவருக்கும், விஜயகாந்துக்குமான காதல் முறிந்து போயிருந்தது. அந்தச் சோகத்தைத் தாங்க முடியாமல் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்குக்கூட ராதிகா முயற்சி செய்திருந்தார்.

ஏனெனில் விஜயகாந்ததை அந்த அளவுக்கு அவர் காதலித்திருந்தார். விஜயகாந்தை ஒரு ஸ்டைலிஷான கேரக்டராக மாற்றியது ராதிகாதான். அவருக்கு சினிமாவுலகின் ஹீரோக்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி அவரையும் ஒரு ஸ்டைல் ஹீரோவாக நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்ட வைத்தவர் ராதிகாதான். இதனாலேயே அந்தக் காதல் தோல்வியை அவரால் சட்டென தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அந்தப் படத்தின்போது ராதிகா, பிரபு இருவரும் நிறைய காமெடிகள் செய்வார்கள். சேட்டைகள் செய்வார்கள். எல்லாரும் விழுந்து, விழுந்து சிரிப்போம். ஆனாலும் திடீர், திடீரென்று ராதிகா மட்டும் மூட் அவுட் ஆகிவிடுவார்.

படத்திலேயே ஒரு காட்சியில் ‘ஒழுக்கம் கெட்டவர்’ என்ற பொய்ப் பழியைச் சுமத்தி ராதிகாவை வீட்டைவிட்டு வெளியேற்றுவதாக ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் அவர் நடித்தவிதத்தை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்ப்பா இருக்கு. அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருந்தார் ராதிகா. தன் மனதில் இருந்த பாரத்தையெல்லாம் அவர் வெளியில் கொட்டியது போலிருந்தது.

அந்த ஷாட் முடிஞ்சதும் ராதிகா, நான், விஜயகுமார் மூவரும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் ராதிகாவிடம், “நீ நடிக்குறதுக்காகவே பொறந்த பொண்ணும்மா.. உன் ரத்தத்துலேயே நடிப்பு ஊறிப் போயிருக்கு. நீ பொறந்து வளர்ந்து வந்த கல்ச்சர் வேற.. ஆனால், விஜியோட கல்ச்சர் வேற. அவரோட பழக்க, வழக்கமெல்லாம் வேற. அவரோட சொந்தக்காரங்கள் எல்லாம் நிச்சயமா உன் சொந்தங்கள் மாதிரியிருக்க மாட்டாங்க. உனக்கும், அவருக்கும் நிச்சயமா செட்டாகாது.

இதுவும் நல்லதுக்குத்தான்னு நினைச்சுக்க. அதை மறந்திட்டு நடிப்புல கவனம் செலுத்து. கொஞ்சம், கொஞ்சமா எல்லாம் மறந்திரும்..” என்று நானும், விஜயகுமாரும் ராதிகாவுக்கு ஆறுதல் கூறினோம்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News