பாரதிராஜா படத்தில் இருந்து எஸ்கேப் ஆக நினைத்த ராதிகா!

பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, எஸ்கேப் ஆக நினைத்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இது குறித்து புலியூர் சரோஜா, பகிர்ந்துகொண்டார். அவர், “படப்பிடிப்பின்போது ஒரு நாள் இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது தனது அறையில் இருந்து தனது பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பினார் ராதிகா. இதனை தற்செயலாக பார்த்த நான்,, “என்ன ஆச்சு, எங்க போற?” என கேட்டேன்.

அதற்கு ராதிகா, “அக்கா, என்னைய விட்ருங்கக்கா, எனக்கு சினிமாவே வேண்டாம். என்னால டான்ஸ் ஆடவே முடியல, ரொம்ப கால் வலிக்குது. நான் ஊருக்கே போறேன்” என கூறினார். நான், ராதிகாவை சமாதானப்படுத்தி தங்கவைத்தேன்.

அதன்பின் “மாஞ்சோலை கிளிதானோ” என்ற பாடலுக்கு மிகவும் பொறுமையாக பரதநாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுத்தேன். மேலும் அவருக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு காலில் தேய்க்க ஒரு மருந்தை வாங்கிக்கொடுத்தேன்.

பாடல் படப்பிடிப்பின்போதெல்லாம் நடனமாடிய பிறகு இரவில் ராதிகாவின் அம்மா அவரது காலில் அந்த மருந்தை தேய்ந்த்துவிடுவார்” என்றார் புலியூர் சரோஜா.