Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு-மருத்துவமனையில் அனுமதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் புனீத் ராஜ்குமார். கன்னட சினிமாவின் மூத்த நடிகரான ராஜ்குமாரின் இளைய மகனான புனீத் ராஜ்குமார் தினமும் ஜிம்மில் உடற் பயிற்சி செய்யும் பழக்கமுள்ளவர்.

இந்நிலையில் இன்று காலை அவர் ஜிம்மில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனீத் ராஜ்குமாரை பார்க்க அவரின் குடும்பத்தார் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள்.

புனீத் ராஜ்குமாரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

புனீத் ராஜ்குமார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News