Friday, April 12, 2024

“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி மீது கடுமையான புகார்களை எழுப்பியிருக்கிறார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் முரளியும், சிங்காரவேலனும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டார்கள். மேலும் தற்போது சிங்காரவேலன் டி.ராஜேந்தர் கெளரவத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது தனது கருத்துக்களை சிங்காரவேலன் வெளியிடுவது வழக்கம். அதேபோல்தான் ஒரு ஆடியோ பதிவை நேற்றைக்கு வெளியிட்டுள்ளார். ஆனால், அது அளவு கடந்த அர்ச்சனையாகிவிட்டதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியளித்த செய்தி.

முரளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு திரையுலகத்தில் பலரையும் மிரட்டி வருவதாகப் புகார் கூறியுள்ளார் சிங்காரவேலன்.

அவர் மேலும் கூறும்போது, “தன்னைத் தவிர வேறு யாரும் முதல்வருடன் நேரடியாக பேச முடியாது. நான் மட்டுமே பேசி வருகிறேன். எனவே இந்தத் திரையுலகத்துக்கே நான்தான் அத்தாரிட்டி என்பதைபோல முரளியின் செயல்பாடுகள் உள்ளன.

‘பெப்சி’யின் தலைவர் செல்வமணியைக்கூட முரளி மிரட்டி வைத்திருக்கிறார். “உங்களைப் பதவியைவிட்டுத் தூக்க அரசு தயாராக இருந்தது. ஆனால் நான்தான் உங்களுக்கு ஆதரவாகப் பேசி உங்களை இருக்க வைத்துள்ளேன். அதனால் நீங்கள் என் பேச்சைத்தான் கேட்க வேண்டும். மற்றைய சங்கங்களின் பேச்சைக் கேட்கக் கூடாது” என்று செல்வமணியை முரளி மிரட்டி வைத்திருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

இப்படி பெப்சி அமைப்பை மிரட்டித்தான் நடிகர் சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்க வைத்துள்ளார் முரளி. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சிம்பு நிச்சயமாக கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது எதற்காக அவர் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டும்..? இது அராஜகமானது.

முரளியின் அத்துமீறல்களைப் பற்றி மிக விரைவில் அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி முதல்வரிடம் நேரில் சென்று புகார் கூறவுள்ளோம்..” என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

- Advertisement -

Read more

Local News