அஜித்திடம் சொன்ன உண்மை: தயாரிப்பாளரிடம் திட்டு வாங்கிய ரவீந்திரன்

தமிழ் சினிமாவின் பிரபல வினியோகஸ்தரும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் என்கிற பெயரில் படங்களை தயாரித்த தயாரிப்பாளருமான ரவீந்திரன் பிரபல யூடியூப் செனலுக்கு அளித்த பேட்டி. நிக் ஆர்ட்ஸ் படம் பண்ணும் போது, அஜித் சாரை அடிக்கடி சந்திப்பேன். அவர் என்னை  அழைத்து படம் எப்படி போகுது கேட்பார் ? நான் உன்மையை கூறிவிட்டு வந்துருவேன். அப்புறம் என்னை கூப்பிட்டு திட்டுவாங்க, ‘யோவ்.. எதுக்கு ஹீரோவிடம் போய் இதெல்லாம் சொல்ற’ சொல்வார்கள்.

‘அவர் நம்பி கேட்கிறார், அவரிடம் பொய் சொல்ல முடியுமா?’ என்று நான் கூறுவேன். ‘எது கேட்டாலும், நல்லா இருக்குனு சொல்லிட்டு வர வேண்டியது தானே? நீ ஏன் போய் பேசுற’ என்று எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சார் கோபப்பட்டிருக்கிறார் என  தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் கூறிய வீடியோ கீழே…