சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என சூர்யா ஹீரோவாக நடித்த படங்களுடன், அவர் கேமியோ ரோலில் நடித்த விக்ரம் படமும் சூர்யாவிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது அவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் கங்குவா படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை மாஸ் காட்டி வருகின்றன. படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தடுத்த கிராபிக்ஸ் பணிகள், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் வில்லன் பாபி தியோலின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டர் போஸ்டரும் வெளியானது. இந்த போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.
உதிரன் என்ற பவர்ஃபுல் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இதுதவிர படத்தில் அவருக்கு சூப்பர் பாடல் ஒன்றும் உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர், “இந்தப் பாடலின் காட்சிகளை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன். படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக அமைந்தால், ஹீரோவின் கேரக்டரும் வலிமையாக அமையும். படத்தில் பாபி தியோலின் வில்லன் கேரக்டர் இதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
மேலும் தனஞ்செயன், “சமூக வலைதள பக்கத்திற்கு செல்லவே பயமாக இருக்கிறது. நான் எந்த விஷயத்தை பேசினாலும், ரசிகர்கள் கங்குவா அப்டேட்டை கேட்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவருகின்றனர்” என்று அவர் உற்சாகத்துடன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தவிர, “சூர்யாவிற்கு இந்திய அளவில் சிறப்பான மார்க்கெட் இருப்பதால் மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் குறித்து சரியான நிலவரத்தை வைத்துதான் இந்தப் படத்தின் ரிலீசை முடிவு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆகவே கங்குவா படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார் தனஞ்செயன்.
அவரது பேட்டி, கங்குவா படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.