பான் இண்டியா படத்துக்கு எதிர்ப்பு!

ஸ்ரீகாந்த் ஓடிலா  இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தசரா’ தெலுங்கு படம், தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இண்டியா திரைப்படமாக உருவாகி உள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சாமி மூவிஸ் நிறுவனம் ‘தசரா’ படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘தசரா’ என்ற தலைப்பை தயாரிப்பு சங்கத்தில் அந்நிறுவனம் பதிவு செய்துள்ள நிலையில் அதே பெயரை நானி படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது விதிகளுக்கு முரணானது. அதனால் தலைப்பை மாற்றக்கோரி சாமி மூவிஸ் நிறுவனம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்து உள்ளது.

இது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.