சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி அஸ்ரானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ தொடரிலும் நடித்திருந்தார்.
இவர் அடுத்து கவின் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார். ‘டாடா’ படத்தை அடுத்து கவின், ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கிஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என் தெரிகிறது.