Thursday, April 11, 2024

சொல்லி அடித்த ஏவி.எம்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -


தமிழ் திரையுலக வரலாற்றின்  ஏவி.எம். நிறுவனர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்  அவர்களை தவிர்க்கவே முடியாது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி அறிவித்த நாளில் படத்தை வெளியிடுவார். அந்த அளவுக்கு முன் யோசனை உடையவர்.


எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அந்தந்த கால சூப்பர்  ஸ்டார்களை வைத்து வெற்றிப் படங்களை அளித்தவர்.


1958ம் வருடம் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம் ஆகியோர் ஜோடியாக நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்”  படத்தை தயாரித்தார்.

பிறகு இத்திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார். அப்போது சிலர், இது தேவையா, லாபம் கிடைக்குமா என கேட்டனர்.

அதற்கு ஏவி.எம். அவர்கள், “ இந்தப் படத்தில் தயாரிப்பை விட ஏழு மடங்கு லாபம் வரும்”  என்றார்.

“பர்கா”  என்று  பெயரிடப்பட்டு, ஜெகதீப், நந்தா  உள்ளிட்டோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தனர். இத்திரைப்படத்திற்கான மொத்த பட்ஜெட் என்பது ரூ.5 லட்சம்.

ஏவி.எம். கணித்தது போலவே, “பர்கா”   ரூ.35 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.

அதாவது ஏவி.எம். சொன்னது போலவே ஏழு மடங்கு லாபம்!

- Advertisement -

Read more

Local News