Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

கமல்ஹாசனுடன் நடிக்க பிரகாஷ்ராஜ் விதித்த வித்தியாசமான நிபந்தனை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிகப் பணம் வேண்டும். நிறைய வசதி, வாய்ப்புகள் செய்து தர வேண்டும் என்றெல்லாம் நடிகர், நடிகைகள் கேட்பதுதான் வழக்கம்.

ஆனால், எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

2002-ம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன்தான் இந்தப் படத்தின் நாயகன் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு பல அருண் பாண்டியன் முதற்கொண்டு பல நடிகர்களை முதலில் தொடர்பு கொண்டு பேசியும் யாரும் அமையாததால் கடைசியாக பிரகாஷ்ராஜை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தொடர்பு கொண்டு நடிக்கக் கேட்டிருக்கிறார்.

அப்போது பிரகாஷ்ராஜ், “நான் வந்து நடிக்கிறேன். பணம் பற்றியெல்லாம் பிரச்சினையில்லை. ஒரே ஒரு நிபந்தனைதான். இந்தப் படத்தில் நான் சொன்ன டயத்துக்கு வந்து நிற்பேன். நடிப்பேன். ஆனால் நடிகர் கமல்ஹாசனுக்காக ஒரு நிமிடம்கூட காத்திருக்க மாட்டேன். அப்படி காத்திருந்த நேர்ந்தால் போய்க்கிட்டேயிருப்பேன்…” என்றாராம்.

இந்தக் கதாபாத்திரத்திற்கு பிரகாஷ்ராஜைவிட்டால் வேறு ஆளில்லை என்கிற நிலைமை அப்போது இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இதற்கு ஒத்துக் கொண்டாராம்.

கூடவே படத்தின் நாயகனான நடிகர் கமல்ஹாசனிடமும் இதைப் போய் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனும் பெருந்தன்மையாக இதை ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து பிரகாஷ்ராஜூடன் நடிக்கவிருந்த நாட்களில் முன்னதாகவே வந்திருந்து பிரச்சினையில்லாமல் நடித்துக் கொடுத்தாராம் கமல்ஹாசன்..!

நடிகர்களின் ஈகோ பிரச்சினை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்று பாருங்கள்.

- Advertisement -

Read more

Local News