Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

பூர்ணிமா-பாக்யராஜின் திருமணச் செய்தி ஒரு திரைப்படத்தில் காட்சியாக பதிவான ருசிகரம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தனக்கும், பாக்யராஜூக்கும் திருமணம் நிச்சயமான செய்தியை முதன்முதலில் ஒரு ஷூட்டிங்கில் நடிகரிடம் சொல்ல.. அப்படி தான் சொன்னதே ஒரு காட்சியாக ஒரு திரைப்படத்தில் பதிவாகியிருக்கும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பூர்ணிமா பாக்யராஜ் அளித்திருக்கும் பேட்டியில் இது பற்றி கூறியிருக்கிறார்.

அது இங்கே :

“திருமண நிச்சயம் முடிந்த மறுநாளே ஒரு மலையாளப் படத்துல மோகன்லால்கூட நடிச்சேன். ‘இந்த நிச்சயம் செய்யப்பட்டதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்’ன்னு பாக்யராஜ் என்கிட்ட சொல்லியிருந்தார். ஆனால், என்னால சொல்லாமல் இருக்க முடியலை. யார்கிட்டயாவது சொல்லலைன்னா தலையே வெடிச்சிரும்போல இருந்துச்சு.

அந்த மலையாளப் பட ஷூட்டிங்ல ஒரு பாடலுக்காக மாண்டேஜ் ஷாட்ஸ் எடுத்துக்கிட்டிருந்தாங்க. கேமிரா ரொம்ப தூரத்துல இருக்கும். நானும், மோகன்லாலும் ஏதாவது பேசிக்கிட்டே நடந்து வரணும். இதுதான் ஷாட்.

கேமிரா ஓடத் துவங்க.. நாங்க பேசிக்கிட்டே நடந்து வந்தோம். அந்த நேரத்துல நான் மோகன்லாலிடம், “ஒரு விஷயம் சொல்றேன். ஆனால் அதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது…” என்று ஆரம்பித்தேன். மோகன்லால் புரியாமலேயே “ஓகே”ன்னு சொன்னார். “நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நிச்சயம் முடிஞ்சிருச்சு”ன்னு சொன்னேன். மோகன்லால் இதைக் கேட்டு ஷாக்காயிட்டார்.

அவர் காட்டிய அந்த அதிர்ச்சியான முகபாவனை அந்தப் பாடல் காட்சில அப்படியே பதிவாகியிருக்கு. இப்பவும் அதைப் பார்க்கலாம். ஆக மொத்தத்துல எனக்குக் கல்யாணம்னு சொன்ன ஒரு விஷயமே ஒரு படத்துல பதிவாகியிருக்கு.. இதை இப்போ நினைச்சாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..!

அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து ‘விதி’ படத்துல நடிக்கப் போகும்போது முன்கூட்டியே தயாரிப்பாளர் பாலாஜி ஸார்கிட்ட போய் சொல்லிட்டேன். அவரும் வாழ்த்தினாரு.. அந்தப் படம்தான் நான் கடைசியா நடிச்சது. அப்புறம் ராதிகாவுக்கு இது தெரியும். ‘என்ன இது.. திடீர் கல்யாணம்’ன்னு சொல்லி அவங்களும் ஆச்சரியப்பட்டாங்க..!..” என்று சொல்லியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

- Advertisement -

Read more

Local News