விருது பெறாத ‘பொன்னியின் செல்வன் ’

ஆசிய விருது விழாவில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஒரு விருதுக்கூட பெறாததது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரு பாகங்களாக உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. வரலாற்று காவியமாக உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகி சாதனை படைத்தது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 16வது ஆசிய விருது விழாவில் போட்டியிட்டது. அதன்படி சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தம் 6 பிரிவுகளில் நாமினேட்டானது.

இந்த விருது விழாவில் பங்கேற்பதற்காக லைக்கா புரொடக்ஷன்ஸ் நிர்வாகி லைக்கா ஜி.கே.எம்.தமிழ்குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் சென்று ஆசிய விருது விழாவில் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் ஆறு பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட இப்படம் ஒரு விருதுகூட பெறவில்லை.
இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.