அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது அனைவரும் அறிந்த செய்தி.
இந்த படம் உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன் 2’ ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்து உள்ளது. இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கிவிட்டன.
இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.