Thursday, April 11, 2024

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

”என்னது.. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், இளையராஜாவின் இசையில் பொ.செ.வா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உண்மைதான்.

பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக்குவதாய் மணிரத்னம் அறிவித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடராகவும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்தனர். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் செய்வதாகவுமும், இளையராஜா இசையமைக்க போவதாகவும் அறிவிப்பு வெளியானது.

அஜய் பிரதீப், “1979-களில் இருந்து, கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சிகள் நடக்காமல் போனதால் பொன்னியின் செல்வன் தொடருக்கு சிரஞ்சீவி என்ற பெயரையும் இணைத்துள்ளேன். திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என முழு உருவாக்கத்தை பார்த்த இளையராஜா உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். இந்த வெப் தொடர் 4 மாதங்கள் ஒளிபரப்பாகும். வெப் தொடருக்கு சாபுசிரில் கலை இயக்குனராகவும் ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும். எட்டர் நிட்டி மோஷன் கிராப்ட் மற்றும் எட்டர் நிட்டி ஸ்டார் தயாரிக்கும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது” என்றார்.

ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. திரைப்படமாக பொ.செ.வாக பார்த்துவிட்டோம். வெப்சீரியலாக வந்தாலும் ரசிக்கத்தானே செய்வோம்… வரட்டும்.

- Advertisement -

Read more

Local News