Thursday, April 11, 2024

பொன்னியின் செல்வன் 2: ஆடியோ விழாவில் மீண்டும் ரஜினி, கமல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’  1 படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

‘பொன்னியின் செல்வன் 2’ அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற ‘அக நக’ என்ற பாடல் நேற்று  (திங்கட்கிழமை) மாலை வெளியானது. தற்போது 11 மணி நேரத்தில், 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் 6 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகிற 29-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News