பொன்னியின் செல்வன் 2:  இசை & டிரைலர் வெளியீட்டு விழா

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி வெளியானது. உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படம், ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மார்ச் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர் .