Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

‘விக்ரம்’ படப் பாடல் – கமல்ஹாசன் மீது காவல்துறையில் புகார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜாதி, மத மோதலைத் தூண்டு்ம் வகையில் பாடலை எழுதியுள்ளதாக மக்கள் நீதி மய்ய’த்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

லோகேஷ், கமலை தவிர்த்து இசையமைப்பாளர் அனிருத், ‘கே.ஜி.எஃப்’ சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு, நடிகர்கள் பகத் பாசில், விஜய் சேதுபதி என்று தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த விக்ரம்’ படத்திலிருந்து டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருந்தன. வரும் மே 15-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் பிரம்மாண்டமான விழாவில் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக இந்த விக்ரம் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘பத்தல பத்தல’ என்ற பாடல் மட்டும் நேற்றைக்கு வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலை கமல்ஹாசனே எழுதி, பாடியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சென்னைத் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கூடவே சர்ச்சையும் எழுந்துள்ளது.

“ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணும் இல்ல இப்பாலே..” என்று மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளன.

மேலும், மத்திய அரசை திருடன்’ என்று கூறும் வகையில், “கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது… தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே… சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே…” என்ற வரிகள் அமைந்துள்ளன.

மேலும், ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் “குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு… குளம் இருந்தும் வலைத்தளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்பே” என்றெல்லாம் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ள.

இந்தப் பாடல் வரிகளை நீக்கக் கோரி ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார்.

“இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 3-ம் தேதி வெளிவரக் கூடிய விக்ரம்’ படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News