சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினருக்கு கடந்த மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான செய்தியை சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்தார்.

இரட்டை பெண் குழந்தைகளின் பெற்றோராகி மகிழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு, ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகன் தனது குழந்தைகளுக்கு கமல்ஹாசன் முன்னிலையில் அழகான தமிழ் பெயர்களை வைத்துள்ளார்.


நேற்று (பிப்ரவரி 14), காதலர் தினத்தை ஒட்டி, கமல்ஹாசன் சினேகனின் இரட்டை குழந்தைகளுக்கு “காதல்” மற்றும் “கவிதை” என அழகிய தமிழ் பெயர்களை வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு தங்க வளையல்கள் அணிவித்து, சிறப்பாக ஆசீர்வதித்தார். இதை குறித்து சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இந்த தருணம் தனக்கென்று மறக்கமுடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.