Wednesday, April 10, 2024

இறுதி நாட்களில் என் உயிர் தோழன் பாபு அனுப்பிய படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா இயக்கிய என் உயிர் தோழன் படத்தில் அறிமுகமான பாபுவை இன்றளவும் மறக்க முடியாது. படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், இவரது நடிப்பு பேசப்பட்டு பல படங்களில் ஒப்பந்தமானார்.

அவர் நடித்த ஐந்தாவது படமான மனசார வாழ்த்துங்களேன் பட படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையானார். கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் அப்படியே இருந்து, சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

இவரிடம் நேரடியாக பழகிய நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சில நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், “பாரதிராஜாவிடம் பாபு உதவியாளராக சேரும்போது அவரது வயது, 22 முதல் 25 வயது இருக்கும்.. அந்த வயதைத் தாண்டி புத்தி சாலித்தனம் இருக்கும்..  கதை விவாதத்தில் நல்ல சீன்கள் சொல்வார்.

அதனால் பாரதிராஜா, தனக்கு நெருக்கமானவராக பாபுவை வைத்துக்கொண்டார். அது அங்கே இருந்த சிலருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியது. ஆனாலும் பாரதிராஜாவுடனான நெருக்கம் குறையவில்லை. ஒரு முறை திரையுலக பிரச்சின குறித்து விவாதிப்பதற்காக பிரசிடன்சி ஓட்டலில் இயக்குநர் கே.பி உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் சந்தித்தனர். அப்போதும்  பாரதிராஜா தன்னுடன் பாபுவை அழைத்துச் சென்றார். அவரது வலப்பக்கம் நான் இடப்பக்கம் பாபு அமர்ந்திருந்தோம்.

இறுதி நாட்களில் அவர் என்னுடன் தொடர்ந்து பேசி வந்தார். தினமும் செல்போனில் படங்கள் அனுப்புவார்…” என்றார் சித்ரா லட்சுமணன்.

அவர் அனுப்பிய படங்கள் என்ன என்பதையும் இன்னும் பாபுவைப் பற்றிய விசயங்களையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News