ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? மனம் திறந்த பெப்சி உமா…

அந்தகால இளைஞர்கள் திருமணம் என்று வரும்போது இந்த நடிகை போல் பெண் இருப்பாள் அல்லது இருக்க வேண்டும் என கட்டளை இடுவார்கள்.சினிமா நடிகைக்கு சரிசமமாக பார்க்கப்பட்டவர் டி.வி.தொகுப்பாளினி பெப்சி உமா.

சினிமா வாய்ப்புக்காக ஏங்கி கிடந்த எத்தனையோ நடிகைகள் மத்தியில் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தவர் பெப்சி உமா.

சன் டிவியின் தொடக்க காலத்தில் இருந்த சில நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.  இந்த சேனலில் நிகழ்ச்சி என்றால் பெப்சி உமா வழங்கிய உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தான்.

 ரசிகர்களை மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டியது உமாவின் குரல் அவரது ஸ்டைலும். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்த இளைஞர்களும் உண்டு என சொல்லலாம்.

அந்த காலத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்த பெப்ஸி உமாவை சினிமா உலகம் வரவேற்க தயாராக இருந்தது. பிரபல இந்தி தயாரிப்பாளர் சுபாஷ் காய் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தார்.ஆனால் அவர் எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என கூறிவிட்டாராம்.

அடுத்து தமிழில் ரஜினியின்  முத்து படத்தில் நடிக்க  வாய்ப்பு வந்த போதும்  யாருடனும் என்னால் சினிமாவில் நடிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

இது குறித்து ஒரு பேட்டியில் கேட்டதற்கு, “எனக்கு  டிவி மீது இருந்த காதல் சினிமா மீது வரவே இல்லை” என்று சிம்பிளாக சொல்லிவிட்டார்.